ADDED : மே 26, 2010 02:16 AM
வால்பாறை : வால்பாறை நடுமலை எஸ்டேட்டை சேர்ந்த ராமசந்திரன் எஸ்டேட் பீல்டு ஆபீசராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை பொள்ளாச்சியிலிருந்து மாருதி காரில் வால்பாறையை நோக்கி சென்றார். கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில் அருகே வரும் போது வனப்பகுதியிலிருந்து எதிர் பாராத விதமாக ரோட்டுக்கு வந்த காட்டெருமை வேனை வேகமாக தாக்கியது. இதில் மாருதிகார், கண்ணாடி மற்றும் முன்பகுதி சேதமானது. வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.